Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் பெரும்பாலான சவூதி நகரங்களில் வியாழன் வரை வானிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

பெரும்பாலான சவூதி நகரங்களில் வியாழன் வரை வானிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

331
0

திங்கள் முதல் வியாழன் வரை சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை ஏற்ற இறக்கங்கள் தொடரும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ஜிசான், ஸப்யா, அபு ஆரிஷ், பேஷ், ஃபிஃபா, அல்-ரைத், அல்-தேர், அஹத் ,மசரேஹா, ஃபராசன், அல்-தவால், சம்தா, தாமத், அல்-ஹரித் மற்றும் ஹரூப் அல்-ஈடாபி மற்றும் அப்ஹா, காமிஸ் முஷெய்த், பிஷா, சரத் உபைத், அஹத் ருஃபைதா, அல்-ஹர்ஜா, அல்-நமாஸ், பெல்கார்ன், அல்-மஜாரிதா, மஹாயில், பாரிக், தனுமா, அல்-ரபூஆ, ரிஜால் அல்மா’, தஹ்ரான் அல்-ஜனூப் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய புழுதிப் புயலுடன் மணிக்கு 50 கிமீ வேகத்தில் வேகத்தில் புயல் தாக்கும் என்று NCM வானிலை அறிக்கை கணித்துள்ளது.

அல்-பஹா, பல்ஜுராஷி, அல்-மண்தக், அல்-குரா, ஆகிய இடங்களில் பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் ஜித்தா, பஹ்ரா, ராபிக், குலைஸ், அல்லைத் மற்றும் குன்ஃபுதா ஆகிய இடங்களிலும், புரைதா, உனைசா, அல்-ராஸ், அல்-புகைரியா, அல் ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

புதன் மற்றும் வியாழன் அன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள ஜுபைல், தம்மாம், அப்காய்க், அல்-அஹ்ஸா, அல்-உதைத் மற்றும் அல்-கோபர் ஆகிய இடங்களிலும், ஷக்ரா, அல்-தவாத்மி, அஃபிஃப், தாதிக் ஆகிய இடங்களிலும் இதே வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடரும் என்று NCM தெரிவித்துள்ளது.அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மையத்தின் சேவைகள் மற்றும் ஊடக சேனல்கள் மூலம் வானிலை தகவல்களைப் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!