தேசிய பயிற்சி பிரச்சாரம் (வாட்) 2023 முதல் பாதியில் 193,000 பயிற்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRSD) செய்தித் தொடர்பாளர் முகமது அல்ரிஸ்கி கூறினார், மேலும் 380,000 பயிற்சி வாய்ப்புகள் என்ற இலக்கை 2023 ஆண்டில் அடைவதற்கான பிரச்சாரம் நடந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தனியார் துறையுடன் இணைந்து திறன் மற்றும் பயிற்சியை வழங்குவதோடு 2025 க்குள் 1,000,000 க்கும் அதிகமான பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதே பிரச்சாரத்தின் இலக்கு என அல்ரிஸ்கி குறிப்பிட்டார்.
சவூதியின் வடக்குப் பகுதிக்கு 30க்கும் மேற்பட்ட பயிற்சி வாய்ப்புகள் ஒதுக்கப்பட்டதாகவும், சில நிறுவனங்கள் இலக்கை விட அதிகமாகச் சாதித்து 100% தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிரச்சாரத்தில் உள்ள பயிற்சி வாய்ப்புகள், தொழிலாளர்கள், வேலை தேடுபவர்கள், மாணவர்களுக்குப் பல பயிற்சி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை வழங்குவதன் மூலம் அனைத்து இளம் சவூதி ஆண்கள் மற்றும் பெண்கள் பயனடைய உதவுவதோடு, அவர்களின் எதிர்காலப் பாதையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





