சவுதி அரேபிய நீதிமன்றம் கட்டுமானத் தளங்களில் இருந்து மின்சார கேபிள்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்களைத் திருடிய திருடர்கள் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேருக்குப் பல்வேறு சிறைத் தண்டனை விதித்தது, இதில் குற்றவாளிகள் சிலருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அவர்கள் திருடப்பட்ட பொருட்களை அந்த இடங்களுக்கு வெளியே பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் கண்டுபிடித்து, அவர்கள் கைது செய்யப்பட்டு உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பொது மற்றும் தனியார் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், குற்றவியல் நடைமுறைகளை மேற்கொள்ளவும் தயங்க மாட்டோம் என அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.





