Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் தம்மாம் நகரில் ஆலங்கட்டி மழை.

தம்மாம் நகரில் ஆலங்கட்டி மழை.

316
0

கடந்த வியாழன் அன்று காலைத் தமாம் நகரில் கனமழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் அடுத்து சில மணி நேரங்களுக்கு நகரத்தில் மழை தொடரும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ஆலங்கட்டி மழையால் சில கடைகளின் கண்ணாடிகள் சேதமடைந்ததுடன், பல வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்தன. கிழக்கு மாகாணம், Jazan, Asir, Al-Bhaha, Makkah, Medina, Hail, Al-Qasim மற்றும் Riyadh பகுதிகளில் காற்று மற்றும் ஆலங்கட்டி மழையுடன் பலத்த இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று NCM கணித்துள்ளது.

மழைக்காலத்தில் பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் செயற்படுமாறும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் குடிமைத் தற்காப்பு இயக்குனரகம் கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளம் மற்றும் நீரோடைகளில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தையும் குடிமைத் தற்காப்புத்துறை வலியுறுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!