Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் பருவநிலை மாற்றத்தை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள சவூதி எரிசக்தி அமைச்சர் அறிவுறுத்தல்.

பருவநிலை மாற்றத்தை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள சவூதி எரிசக்தி அமைச்சர் அறிவுறுத்தல்.

289
0

திங்களன்று ரியாத்தில் நடந்த முதல் சவுதி-ஐரோப்பிய முதலீட்டு மன்றத்தில் உரையாற்றிய சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான், பருவநிலை மாற்றம் என்பது எதார்த்தமான ஒன்று என்றும், ஒருங்கிணைந்த, அது விரிவான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

முக்கிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோகார்பன் தொழிற்துறையை பல்வகை தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம், மற்ற இடங்களிலும் அதைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் இளவரசர் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் 50-50 கொள்கையைப் பின்பற்றி வருகிறோம், அதாவது ஆற்றலை உற்பத்தி செய்யத் திரவ எரிபொருளை எரிப்பதை விட்டுவிட்டு 50 சதவிகிதம் எரிவாயுவை நம்பியுள்ளோம்.மற்ற 50 சதவிகிதம் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து வரும் என்று அமைச்சர் கூறினார்.

பாரீஸ் ஒப்பந்தத்தில் கலந்துக் கொள்ள சவூதி கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். சவூதி முதலீட்டு அமைச்சர் காலித் அல்-பாலிஹ், “பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் செழிப்பை வளர்ப்பது” என்ற கருப்பொருளுடன் இந்த அமைப்பின் முதல் பதிப்பைத் தொடங்கி வைத்தார்.

இந்த முதலீட்டு அமைச்சகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு முயற்சியின் விளைவாகும். உறவுகளை வலுப்படுத்தச் சவூதி அரேபியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு பயன்படுத்துவதே இதன் நோக்கம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!