கடந்த ஜூன் 16ஆம் தேதி அன்று சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான அல்கோபார் நகரில் சவுதி தமிழ் கலாச்சார மையம் கோடை கொண்டாட்டம் என்கிற மாபெரும் தமிழர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முனைவர் பர்வீன் சுல்தான் அவர்கள் இந்தியாவில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே ஊக்கமளிக்கும் உற்சாகமான கருத்துகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் சவுதி தமிழ் கலாச்சாரம் மையம் மற்றும் Universal Inspection Company இணைந்து சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்தியன் பன்னாட்டு பள்ளி உட்பட ஏனைய சிபிஎஸ்சி பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிக் கௌரவித்தனர். பல பள்ளி மாணவர்கள் தனது மேற்படிப்புக்காகத் தாயகம் சென்று விட்ட காரணத்தினால் அவர்களால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆகவே, ஜுபைல் பகுதியில் உள்ள இந்திய மாணவர்களின் பெற்றோர்களை நேரடியாகச் சந்தித்து ஜுபைல் இந்தியன் பன்னாட்டு பள்ளியின் தமிழ் ஆசிரியை திருமதி சங்கீதா சங்கர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.
சவுதி தமிழ் கலாச்சாரம் மையம் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் மற்றும் விடுபட்ட மாணவர்களிடம் நேரடியக வழங்கிய ஆசிரியை சங்கீதா சங்கர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.





