Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சினிமா மற்றும் நாடகத்துறைக்கான பிரிவை அறிமுகம் செய்துள்ள சவுத் பல்கலைக்கழகம்.

சினிமா மற்றும் நாடகத்துறைக்கான பிரிவை அறிமுகம் செய்துள்ள சவுத் பல்கலைக்கழகம்.

217
0

ரியாத்தில் உள்ள இமாம் முகமது பின் சவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம், ஊடகம் மற்றும் தொடர்பு கல்லூரியில் சினிமா மற்றும் நாடகத்துறையை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.

கணினி மற்றும் தகவல் அறிவியல் கல்லூரியில் இணைய பாதுகாப்பு துறை, கல்வியியல் கல்லூரியில் ஆரம்பக் குழந்தைப் பருவத் துறை; பொறியியல் கல்லூரியில் தொழில்துறை பொறியியல் துறை; மற்றும் மருத்துவக் கல்லூரியில் உளவியல் துறை மற்றும் கதிரியக்கவியல் துறை ஆகியவை மறுசீரமைப்பில் அடங்கும்.

மேலும் பொருளாதாரம் மற்றும் நிர்வாக அறிவியல் கல்லூரியின் பெயரை வணிகக் கல்லூரி என்று மாற்றவும், அதே கல்லூரியில் சந்தைப்படுத்தல் துறையை உருவாக்கவும், தவா மற்றும் இஹ்திசாபிற்கான உயர் கல்வி நிறுவனத்தை மத அடிப்படைகள் மற்றும் மதக் கல்லூரி என்ற பெயரில் மத அடிப்படைக் கல்லூரியுடன் இணைக்கவும் பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஊடகம் மற்றும் தொடர்பியல் கல்லூரியின் டீன், பிரின்ஸ் சாத் பின் சவுத் 2023ஆம் ஆண்டு சினிமா மற்றும் நாடகத்துறையில் முதல் இளங்கலை பட்டப்படிப்பை பல்கலைக்கழகம் தொடங்க உள்ளதாகக் கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில், இந்தப் புதிய திட்டம் சவூதியில் உள்ள சினிமா மற்றும் நாடகத் துறையில் நேரடி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!