சவூதி அரேபியாவின் டிஜிட்டல் உபயோககுறியீடு முந்தைய சுழற்சியில் 77.26% இல் இருந்து 2023 இல் 80.68% ஆக உயர்ந்துள்ளதாக டிஜிட்டல் அரசாங்க ஆணையம் (DGA) அறிவித்துள்ளது.
பயனாளிகளின் திருப்தி, பயனர் அனுபவம், புகார்களைத் தீர்ப்பது, தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் ஆகிய நான்கு முக்கிய முன்னோக்குகளுடன் 24 டிஜிட்டல் தளங்களின் முதிர்ச்சியை அளவிடுவதில் குறியீடானது கவனம் செலுத்துவதாக DGA தெளிவுபடுத்தியது.
இதில் முதல் 10 டிஜிட்டல் இயங்குதளங்களாக எஹ்சான் இயங்குதளம் 89.40%,அதைத் தொடர்ந்து அப்ஷர் 89.28% என்ற சிறிய வித்தியாசத்துடனும், சமூக காப்பீட்டுக்கான பொது அமைப்பு (GOSI) பிளாட்ஃபார்ம் 88.10%,Sehhaty இயங்குதளம் 86.50% பெற்று பட்டியலில் நான்காவது இடத்தையும், அதைத் தொடர்ந்து ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் 86.09%, தவக்கல்னா 85.35%. Etimad இயங்குதளம் 83.20%, Najiz 83.04%, Saber 82.44%, மற்றும் சவுதி வணிக மையம் 81.59% – என்ற பயன்பாட்டிலும் உள்ளதாக DGA கூறியது.
டிஜிட்டல் அனுபவ உபயோக குறியீடு பயனாளிகளின் திருப்தியின் அளவை அதிகரிக்கவும், அவர்களின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்தி இலக்குகளை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று DGA கவர்னர் பொறியாளர்.அகமது பின் முகமது அல்-சுவையான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோரிடமிருந்து டிஜிட்டல் அரசாங்கம் பெறும் வரம்பற்ற ஆதரவை இது பிரதிபலிப்பதாகப் பொறியாளர் அல்-சுவையன் கூறினார்.





