அல்-மொக்னாஸ் தீவன வர்த்தக நிறுவனம், சந்தையில் மேலாதிக்க நிலையைப் பயன்படுத்தி போட்டியைக் கட்டுப்படுத்த தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், பொருட்களின் தயாரிப்புகளைக் குறைத்து அல்லது அதிகரித்து பொருட்களின் விலையக் கட்டுப்படுத்தியதற்காகவும், வியாபார போட்டிக்கான பொது ஆணையத்தின் இயக்குநர்கள் குழு அந்நிறுவனத்திற்கு ரியால் 10 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
நிறுவனத்திற்கு எதிரான புகார்களை விசாரிக்க முடிவு செய்த ஆணையத்தின் இயக்குநர்கள் குழு, பின்னர் வழக்கைத் தகுந்த ஆணையத்திற்கு அனுப்பியது. விசாரணையில் நிறுவனம் வியாபார போட்டிச் சட்டத்தின் பிரிவவை மீறியதாகத் தெரியவந்தது, பின்னர் இயக்குநர்கள் குழு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க தங்கள் முடிவை வெளியிட்டனர்.
ரியாத்தில் உள்ள நிர்வாக மேல்முறையீட்டு நீதிமன்றம் இயக்குநர்கள் குழு வழங்கிய தண்டனைக்கு எதிராக அல்-மோக்னாஸ் ஃபீட் டிரேடிங் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அனைத்து நிறுவனங்களும் போட்டிச் சட்டம் மற்றும் நிர்வாக விதிமுறைகளுக்கு இணங்குமாறும், சந்தைகளின் வளர்ச்சி மற்றும் செயல்திறனை ஆதரிக்கும் முறையான போட்டி விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் குழு வலியுறுத்தியுள்ளது. மேலும், அதிகாரசபையின் இணையதளமான http://www.gac.gov.sa இணைய பக்கத்தில் வழிகாட்டலகளைப் பார்வையிடுமாறு நிறுவனங்களுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.