சவூதி அரேபியா நடத்திய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஓமன் சுல்தானின் சிறப்புப் பிரதிநிதி, உறவுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணைப் பிரதமர், அசாத் பின் தாரிக் அல் சைத் தன் நன்றியினை தெரிவித்துள்ளார்.
அல் சைத், ஓமனின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் வாழ்த்துக்களையும் உச்சிமாநாடு வெற்றிபெற தனது வாழ்த்துக்களையும் ஜித்தாவில் தொடங்கப்பட்ட ஜி.சி.சி-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தியபோது தெரிவித்தார். பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்தி இரு நாட்டின் திறன்கள், இயற்கை வளங்களைக் குறிப்பிட்டு உரையாற்றினார். இந்த மாநாடு ஜிசிசி- மத்திய ஆசிய உறவுகளுக்குப் புதிய தொடக்கமாக இருக்கும் என்று அல் சைட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
GCC-மத்திய ஆசிய உறவுகளின் வளர்ச்சி 2023 முதல் 2025 வரை, இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் செயல் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முன்னேற்றத்தை அடைய அவர்களின் லட்சியங்களை பாராட்டியுள்ளார். GCC உறுப்பு நாடுகள், மத்திய ஆசிய நாடுகளின் பொதுவான நலன்கள், பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்க ஒருங்கிணைப்பு தேவை என்று அல் சைட் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு தங்களுக்கென ஒரு சுதந்திரமான அரசைப் பெறுவதற்கான பாலஸ்தீனியர்களின் உரிமை, முக்கியமாகப் பாலஸ்தீனியப் பிரச்சினைகளுக்கு ஆதரவளிக்கும் சவூதி, மத்திய ஆசிய நாடுகளை ஓமானி சுல்தானின் பிரதிநிதி பாராட்டினார். மேலும் உச்சிமாநாட்டை நடத்தியதற்கும், விருந்தோம்பலுக்கும் சவூதி அரேபியாவுக்கு நன்றியைத் தெரிவித்தார்.