கடந்த செவ்வாய்க்கிழமை பெரிய பொருளாதாரங்களின் G20 குழுவில் நிரந்தர உறுப்பினராக ஆபிரிக்க யூனியனின் முயற்சியைச் சவூதி அரேபியா ஆதரிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம், பொருளாதார மந்தநிலை, கடன் நெருக்கடி, கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து நிலையற்ற மீட்சி போன்ற தற்போதைய சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தின் காரணமாக ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) நிரந்தர உறுப்பினராக G20 இல் இணைவதை சவூதி ஆதரித்துள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், நலன்களுக்குச் சேவை செய்வதற்காகவும் அவற்றை உயர் மட்டங்களுக்குக் கொண்டு செல்லவும் சவூதி திட்டமிட்டுள்ளது.