ஜூன் 19 திங்கட்கிழமை, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், பட்டத்து இளவரசரும், பிரதமருமாகிய முகமது பின் சல்மான் முன்னிலையில், 179 நாடு பிரதிநிதிகளுக்கு ரியாத் எக்ஸ்போ 2030 சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிமுக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த விரிவான ஏற்பாடுகளைச் சவூதி அரேபியா செய்து வருகிறது.
சர்வதேச கண்காட்சிகள் பணியகத்தின் (தி பீரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ்) பிரதிநிதிகள் முன்னிலையில் விழாவையொட்டி கண்காட்சியும் நடத்தப்படும். இந்தக் கண்காட்சியின் மூலம், பங்கேற்பாளர்கள் 2030 இல் ரியாத்திற்கு ஒரு அரசுமுறை மற்றும் வியாபார பயணத்தை மேற்கொள்வார்கள். மேலும் இந்த அறிமுக நிகழச்சியானது எக்ஸ்போ 2030 தொடங்குவதற்கு முன் தயாராக இருக்க வேண்டிய திட்டங்களைப் பற்றி விளக்குவது நோக்கமானதாக இருக்கும்.
சவூதி அரேபியாவின் தனித்துவமான உள்கட்டமைப்புடன், மேலும் உலகின் மையப்பகுதியில் உள்ள சவூதி அரேபியாவின் புவியியல் இருப்பிடத்தின் வேறுபாட்டையும், அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் செழுமை மற்றும் அசல் தன்மை, சவுதி பொருளாதாரத்தின் தின் ஆளுமை, நாட்டின் சுற்றுல்லா வாய்ப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டும்.
உயர்மட்ட சவூதி தூதுக்குழு, பாரிஸை தளமாகக் கொண்ட சர்வதேச தூதரகப் படையின் உறுப்பினர்கள், யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற நாடுகளின் தூதர்கள், முக்கிய பங்குபெறும் நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத்தின் மூத்த பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் தனியார் துறையினர் இந்த அறிமுக வரவேற்பு நிகழச்சியில் பங்கேற்க உள்ளனர்.
ரியாத் எக்ஸ்போ 2030 ஆனது, பங்கேற்பாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு ஓர் உன்னத உலகளாவிய அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் ஒரு பில்லியன் நேரடி வருகைகள் தவிர, 40 மில்லியன் பார்வையாளர்கள் நிகழ்வில் இணையதள வழியாகக் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியின் மொத்த பரப்பளவு ஒரு மில்லியன் சதுர மீட்டர் ஆகும், மேலும் 226 பங்கேற்பாளர்கள், சர்வதேச அரங்குகள் மற்றும் உலகளாவிய அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான விசயங்களும் இதில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.