Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மரைன் டெக்னாலஜி சொசைட்டி பிரிவை மத்திய கிழக்கிற்கு கொண்டு வரும் KAUST.

மரைன் டெக்னாலஜி சொசைட்டி பிரிவை மத்திய கிழக்கிற்கு கொண்டு வரும் KAUST.

178
0

மத்திய கிழக்கின் முதல் MTS பிரிவான செங்கடல் பகுதியைக் கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (KAUST) மற்றும் மரைன் டெக்னாலஜி சொசைட்டி (MTS) ஆகியவை அறிவித்துள்ளது.

நிலையான கடல் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். பல்லுயிரியலைப் பாதுகாக்கவும் புதிய கடல் தொடர்பான பொருளாதாரங்களை உருவாக்கவும் சவூதி முயல்கிறது.

மத்திய கிழக்கில் கடல்சார் தொழில்நுட்பத்திற்கான KAUST இன் முக்கியத்துவத்தை MTS விரைவாக அங்கீகரித்துள்ளது என மரைன் டெக்னாலஜி சொசைட்டியின் தலைவர் ஜஸ்டின் மேன்லி கூறியுள்ளார். கரையோர மற்றும் கடல் வள மைய ஆய்வகம் (CMR) மூலம் கடல் தொழில்நுட்பத்தின் தலைவராக KAUST அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

MTS , KAUST உடன் இணைந்து RobotoKAUST ஐ நடத்த, ரோபாட்டிக்ஸ் மற்றும் தன்னாட்சி பற்றிய KAUST மாநாட்டை மே 8 முதல் 10 வரை நடைபெற்றது. KAUSTன் முதல் செங்கடல் MATE ROV போட்டியை மே 13 நடத்தியது, இது சவுதி அரேபியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.

MATE ROV போட்டிகளில் மாணவர்கள் 2001 ஆம் ஆண்டு முதல் போட்டியிடுகின்றனர். MATE இன்ஸ்பிரேஷன் MTS இன் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!