சவூதி மத்திய வங்கியான SAMA Bank 16வது சவுதி இன்சூரன்ஸ் சந்தையின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 2022 ஆம் ஆண்டில் காப்பீட்டுத் துறை 26.9% வளர்ச்சியடைந்துள்ளதாகவும், மொத்தம் வசூலிக்கப்பட்ட காப்பீடு பிரீமியத் தொகை 53 பில்லியன் ரியால்கள் என்றும், 2022 ஆம் ஆண்டில் சவூதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காப்பீட்டுத் துறையின் செயல்திறன் மற்றும் பங்களிப்பை இது எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறியுள்ளது.
உடல்நலக் காப்பீடு, பாதுகாப்பு மற்றும் சேமிப்புக் காப்பீடு மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் ஆகியவை மொத்தம் வசூலிக்கப்பட்ட பிரீமியங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன என்றும் கூறியுள்ளது
எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான ஊடுருவல் விகிதம் 2021 இல் 1.91% இல் இருந்து 2022 இல் 2.09% ஆக அதிகரித்ததோடு, சவுதிமயமாக்கல் விகிதம் 2021 இல் 77% லிருந்து 2022 இல் 79% ஆக அதிகரித்துள்ளது எனவும் ஒட்டுமொத்த இழப்பு விகிதம் 2022 இல் 83.4% ஆக மாறாமல் இருந்தது என அறிவித்துள்ளது.
2021 இல் 47 மில்லியன் ரியால் நிகர இழப்புடன் ஒப்பிடுகையில், 2022 இல் நிகர லாபம் 689 மில்லியன் ரியாலை எட்டும் என்றும் காப்பீட்டு நடவடிக்கைகளின் வருமானம் அதிகரிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
இந்த முன்னேற்றங்கள் காப்பீட்டுத் துறையில் நேர்மறையான போக்கைக் எடுத்துக்காட்டி பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாக்கும் காப்பீட்டுத் தயாரிப்புகளின் நியாயமான விலையை வலியுறுத்துவதோடு துறையின் செயல்திறன் மற்றும் அதன் பொருளாதார தாக்கத்தை மேம்படுத்துவதற்கான SAMA வங்கியின் முயற்சிகளை பிரதிபலிக்கிறது.
இந்த தரவுகள் அனைத்தும் SAMA வங்கியின் இணையத்தில் கிடைக்கும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.