வருங்கால பயணிகள் இந்த ஆண்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன் எடுக்க வேண்டிய கட்டாய தடுப்பூசிகளாகக் கடந்த 5 ஆண்டுகளில் மெனிங்கோகோகல் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாதவர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் அனைத்து டோஸ்களும், பருவகால காய்ச்சல் தடுப்பூசியையும் போட வேண்டும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
ஹஜ்ஜுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை தடுப்பூசிகள் அதன் சுகாதார வசதிகளில் கிடைக்கும் என்றும், பயணிகள் Sehhaty செயலிமூலம் தடுப்பூசிகளை எடுக்க முன்பதிவு செய்யலாம் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டது.
உள்நாட்டு பயணிகளுக்கு ஹஜ் அனுமதி வழங்குவதற்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்வது கட்டாயம் என்றும், மேலும் அவர்கள் ஒதுக்கப்பட்ட பொதிகளில் இருக்கைகள் கிடைக்கும் பட்சத்தில், ஜூன் 25 ஆம் தேதிக்கு இணையான து அல்-ஹிஜ்ஜா 7 ஆம் தேதிவரை ஹஜ் அனுமதிப்பத்திரங்களுக்கான பதிவுகள் திறந்திருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. உரிய தேதிகளில் பணம் செலுத்துவதில் தோல்வி அல்லது பல்வேறு காரணங்களுக்காகக் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களால் முன்பதிவுகளை ரத்து செய்ததன் விளைவாகக் காலியிடங்கள் ஏற்படலாம்.
இருக்கைகள் கிடைத்தால், அதன் இணையதளம் மூலமாகவோ அல்லது நுசுக் செயலி மூலமாகவோ இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.