பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் (GEA) இயக்குநர்கள் குழுவின் தலைவர் துர்கி அல்-ஷேக், செப்டம்பர் 23 அன்று வரும் சவூதி அரேபியாவின் 93 வது தேசிய தினத்திற்கான புதிய அடையாளமாக “நாம் கனவு காண்போம்! சாதிப்போம்” என்ற முழக்கத்தை அறிவித்தார்.
வெவ்வேறு சவுதி திட்டங்களின் குறியீட்டால் சூழப்பட்டுள்ள சவூதியின் இளைஞர்களைக் குறிக்க புதிய வடிவமைப்பானது ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உருவத்தை மையத்தில் வைத்துள்ளது மேலும் டிரியா கேட், சிந்தாலா, அல்உலா டெவலப்மென்ட், தி லைன், அல்சௌதா டெவலப்மென்ட், ஸ்போர்ட்ஸ் பவுல்வர்டு, கிங் சல்மான் பார்க், ஷுஐபா சோலார் பவர் பிளாண்ட், எலக்ட்ரிக் கார், அஸ்ட்ரோனாட் புரோகிராம் மற்றும் கியூப் ப்ராஜெக்ட் ஆகியவையும் வடிவமைப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் “Our Date 2030,” “Above the Clouds,” “Yes” and “My Home Is Here.”என்று இணையதளத்தில் நான்கு பாடல்களும் உள்ளன.