அக்டோபர் 2022 இல் இரண்டு ஆன்லைன் சேவைகள் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் உள்துறை அமைச்சகத்தின் அப்ஷர் எலக்ட்ரானிக் தளத்தின் மூலம் 500,000 க்கும் மேற்பட்ட மின்னணு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டும், புதுப்பிக்கப்பட்டும் உள்ளன என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) அறிவித்துள்ளது.
சவூதி குடிமக்கள் அப்ஷர் தளம்மூலம் தங்கள் பாஸ்போர்ட்களை வழங்கலாம் அல்லது புதுப்பிக்கலாம், மேலும் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட அவர்களின் தேசிய முகவரிக்கு வழங்கப்பட்ட அஞ்சல் கேரியர் வழியாக அதைப் பெறலாம்.
பாஸ்போர்ட்டின் குறைந்தபட்ச செல்லுபடியாகும் காலம் அரபு நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது மூன்று மாதங்களுக்கும் குறைவாகவும், மற்ற நாடுகளுக்கு ஆறு மாதங்களும் தேவை, என்றும் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
சவூதிக்கு வெளியே பயணம் செய்ய விரும்பும் குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட்டின் செல்லுபடியை சரிபார்க்கவும், பயணத் தேதிக்கு முன்னதாகவே அவர்களுக்கோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களுக்கோ புதிய பாஸ்போர்ட்களை புதுப்பித்தல் அல்லது வழங்குவதை விரைவுபடுத்துமாறு ஜவாசத் அழைப்பு விடுத்துள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) மாநிலங்களுக்குச் செல்லும் குடிமக்கள் தேசிய அடையாள அட்டையை (ID) மட்டுமே வைத்திருக்க வேண்டும் எனவும் அப்ஷர் மற்றும் தவக்கல்னா பிளாட்ஃபார்ம்கள் மூலம் டிஜிட்டல் ID அதன் உரிமையாளர் சவூதிக்கு வெளியே பயணிக்க அங்கீகரிக்கப்பட்ட ஆவணம் அல்ல என்றும் இயக்குநரகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இ-பாஸ்போர்ட்டை வழங்குவதற்கு 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயத் தேவை என்றும் ஜவாசத் தெரிவித்துள்ளது.