போதைப்பொருள் பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் மர்வான் அல்-ஹஸ்மி ,காபி க்ரீமர் கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8,280,078 ஆம்பெடமைன் மாத்திரைகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2 சிரியா வாசிகள், காலாவதியான பார்வையாளர் விசாவைக் கொண்ட ஒரு சிரிய குடிமகன் , இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மொத்தம் 5 பேர் ரியாத்தில் கைது செய்யப்பட்டனர். சட்ட நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட பின் வழக்கு பொது வழக்கறிஞருக்கு மாற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் அல்லது ஊக்குவிப்பு தொடர்பான செயலை தெரிவிக்க மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளுக்கு (911) மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு (999) என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு
புகார்களை தெரிவிக்கலாம் .மேலும் இயக்குனரகத்தின் எண் (995) மற்றும் மின்னஞ்சல்: 995@gdnc.gov.sa. மூலமாகவும் புகார்களை பதிவிடலாம் என இயக்குநரகம் தெரிவித்துள்ளது.