ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையத்தின் (ZATCA)அறிக்கை படி, சவுதி அரேபியா இதுவரை இறக்குமதி செய்துள்ள மின்சார வாகனங்களின் (EV) மொத்த எண்ணிக்கை 71,209ஐ எட்டியுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களும் அடங்கும் என்று அல்-எக்திசாதியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியா இதுவரை 711 EV களை இறக்குமதி செய்துள்ளது, மேலும் 2022 இல் 13,958 EVகளை இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து சவூதி அரேபியாவின் மின்சார வாகனங்களை எட்டு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளது, அதில் அமெரிக்கா 465 மின்சார வாகனங்களுடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் 97, ஜப்பானில் 81,சீனாவில் 49,செக் குடியரசிலிருந்து 8, இத்தாலியிலிருந்து 6,தென் கொரியாவிலிருந்து 3, ஸ்பெயினிலிருந்து 2 மின்சார வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
மின்சார வாகனங்களைப் பயன்படுத்தச் சவூதி தரநிலைகள், அளவியல் மற்றும் தர அமைப்பு (SASO) இணையதளம் மூலம் மின்சார வாகனங்களுக்கான (CCR) இணக்கச் சான்றிதழுடன் கூடுதலாக எலக்ட்ரானிக் “SABER” சான்றிதழை வழங்கச் சப்ளையர்களை அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவில் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் முதல் சவுதி ஆட்டோமொடிவ் பிராண்டான Ceer நிறுவனத்திற்கு தொழில்துறை மற்றும் கனிம வள அமைச்சகம் (MIM) தொழில்துறை உரிமம் வழங்கியுள்ளது, Ceer பொது முதலீட்டு நிதியம் மற்றும் Hon Hai Precision Industry Co. (Foxconn) ஆகியவற்றின் கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.