2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில், சவூதி அரேபியாவில் தங்குமிடம் மற்றும் உணவு சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 694,000 ஐ எட்டியுள்ளது.
உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஃபர்னிஷ்டு அபார்ட்மென்ட்களை உள்ளடக்கிய துறையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் சுமார் 78.3% அதாவது 543.2 ஆயிரம் தொழிலாளர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆவர்.
பெண்களைப் பொறுத்த வரையில், மொத்த ஊழியர்களில் 11.3%, சுமார் 78.06 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் ஹோட்டல் துறையில் உள்ளனர். இத்துறையில் சவூதி பெண்கள் 92.6% அதிக சதவீதத்துடன் உள்ளனர். ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 616.1 ஆயிரம் தொழிலாளர்களை எட்டியுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகபட்சமாக 537.4 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் 78.77 ஆயிரம் சவுதி தொழிலாளர்கள் உள்ளனர்.
சவூதி பொறுத்தவரை, ரியாத் பகுதி சுமார் 226.8 ஆயிரம் தொழிலாளர்களுடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து 175.69 தொழிலாளர்களுடன் மக்கா நகரமும், மற்றும் அல்-ஷர்கியா நகரம் 110.77 ஆயிரம் தொழிலாளர்களுடன் உள்ளது.