சவூதி மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் இன்ஜி. அஹ்மத் அல்-ராஜி 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும் தங்கள் பயிற்சித் தரவை அமைச்சகத்தின் கிவா தளத்தின் மூலம் ஆண்டுதோறும் வெளியிட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் பயிற்சிக் காலம் ஆண்டுதோறும் ஒரு பயிற்சியாளருக்கு எட்டு அலகுகளுக்குக் குறைவாக இருக்கக் கூடாது, நிறுவனங்கள் தங்கள் பயிற்சித் திட்டங்கள், தரவுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள், பயிற்சியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அடுத்த ஆண்டுக்கான மொத்த வரவு செலவுத் திட்டம் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.
இந்த முடிவானது தேசிய அளவிலான பயிற்சி தரவுகளின் தெளிவான குறியீடுகளை வழங்கவும், பணியாளர்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் தனியார் துறையை ஊக்குவிக்கவும் பங்களிக்கும்.
அமைச்சகம் அதன் இணையதளத்தில் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களுக்கான வழிமுறை, பயிற்சி தேவைகள் மற்றும் முடிவை மீறும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் ஆகியவற்றை விளக்கும் நடைமுறை வழிகாட்டியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.