முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சவூதி அரேபியா ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் என்ற அளவில் டிசம்பர் 2024 இறுதி வரை எண்ணெய் உற்பத்திக்கான குறைப்பு நீட்டிக்கும் என்று எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
OPEC உடன்படிக்கையில் பங்கேற்கும் சில நாடுகளுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஜூன் 4, 2023 அன்று நடந்த ஒபெக் பிளஸின் 35வது அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, தேவையான உற்பத்தி மட்டத்தில் இருந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.