சமூக காப்பீட்டு அமைப்பின் கீழ் சவுதி சந்தாதாரர்களின் எண்ணிக்கை தனியார் துறையில் பதிவு செய்யப்பட்ட மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 22.4 சதவீதத்தை குறிக்கிறது. 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சவூதியின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 47,500 அதிகரித்து 2.27 மில்லியன் தொழிலாளர்களை எட்டியதாகச் சமூகப் பாதுகாப்பு பொது அமைப்பு (GOSI) தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் GOSI சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 10.69 மில்லியனை எட்டியுள்ளது. முந்தைய காலாண்டில் 10.5 மில்லியன் சந்தாதாரர்களை எட்டியதை விடத் தற்போது சுமார் இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளது.
தனியார் துறையில் பணிபுரியும் செயலில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் 10.15 மில்லியனை எட்டியது, அதே ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 9.98 மில்லியன் சந்தாதாரர்களுடன் இருந்தது. தனியார் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 127,900 சந்தாதாரர்களாக அதிகரித்து, 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அவர்களின் எண்ணிக்கை 7.88 மில்லியன் தொழிலாளர்களாக உள்ளது.
GOSI அறிக்கையின்படி, சமூக காப்பீட்டு அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களை ரியாத் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் முடிவில் சுமார் 4.47 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர், இது மொத்த சந்தாதாரர்களில் 44% ஆகும்.





