ஃபார்முலா 1 சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டி தொடர்ந்து 4வது ஆண்டாக ஜித்தாவில் நடைபெறுகிறது. மேலும் இந்தப் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 7 முதல் 9 வரை நடைபெறும்.
சவுதி மோட்டார்ஸ்போர்ட் நிறுவனம் (SMC) இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.மேலும் 2024 FIA ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் காலண்டரின் தற்காலிக வெளியீட்டின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2024 பந்தயம் அதன் முந்தைய வார இறுதி வடிவத்தில் மாற்றங்களைக் காண வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தில் சிக்கல்களைத் தவிர்க்கச் சனிக்கிழமை இரவு கிராண்ட் பிரிக்ஸ் நடைபெறுகிறது.
இந்தச் சாம்பியன்ஷிப் போட்டியானது அற்புதமான செங்கடலின் பின்புலத்தில் உள்ள விளக்குகளின் கீழ் அனைத்து பார்வையாளர்களுக்கும் நல்ல ஒரு அனுவத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.