சவூதி இ-காமர்ஸ் கவுன்சிலுடன் இணைந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொது ஆணையம் (Monsha’at) ஏற்பாடு செய்த மின் வணிகச் கண்காட்சி, இதுவரை 3,500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்று ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜித்தா, அசிர் மற்றும் ரியாத் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணத்தின் கடைசி மூன்று நிறுத்தங்களில், 46 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் வணிக நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, இந்நிகழ்வில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டு 500 க்கும் மேற்பட்டோர் ஆலோசகர்களுடன் ஒருவரையொருவர் ஆலோசனை அமர்வுகளில் பயனடைந்தனர் என Monsha’at சில்லறை வணிகத்தின் பொது மேலாளர் Mahmoud Mazi சுட்டிக்காட்டினார்.
சவூதி அரேபியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இ-காமர்ஸில் ஆர்வமுள்ள மக்களுடன் நேரடித் தொடர்பை மேம்படுத்தி அவர்களை ஒருவரோடு ஒருவர் இணைப்பதே இந்த சுற்றுப்பயணத்தின் குறிக்கோள் ஆகும்.
ஈ-காமர்ஸ் பாரம்பரிய நிலையங்களை அகற்றாமல் வணிகர்கள் எங்கிருந்தாலும் தங்கள் வாடிக்கையாளர்களை அடைய இது ஒரு கூடுதல் வழிமுறையாக இருக்கும்.
மேலும் உணவகத் துறை சவூதி அரேபியாவில் இ-காமர்ஸால் அதிகம் பயனடைந்த துறை எனவும் Mazi குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவின் முக்கிய திட்டங்களான NEOM, AlUla, செங்கடல் மற்றும் Amaala போன்ற திட்டங்களுக்கு அருகில் இருப்பதால், மதீனாவின் புவியியல் இருப்பிடம் தனித்துவமானது, மேலும் விற்பனையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதிக அளவில் இருக்கும் பகுதிகளில் மதீனா ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.
இ-காமர்ஸ் சுற்றுப்பயணத்தின் நான்காவது நிலையம் மதீனா ஆகும்.இது ஜிசான், அல்-அஹ்ஸா, கோபார், அரார், அல்-காசிம், ஹைல், அல்-ஜௌஃப், தபூக், நஜ்ரான் மற்றும் அல்-பஹா உள்ளிட்ட 10 சவுதி நகரங்களுக்குச் செல்லும் எனவும் Mazi குறிப்பிட்டார்.





