Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் 340 ஊழல் சந்தேக நபர்களிடம் விசாரணை செய்த NAZAHA அமைப்பு.

340 ஊழல் சந்தேக நபர்களிடம் விசாரணை செய்த NAZAHA அமைப்பு.

188
0

சவூதி அரேபியாவின் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (NAZAHA) ஹிஜ்ரி 1445 ஸஃபர் மாதத்தில் 3,452 கண்காணிப்பு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு 340 ஊழல் சந்தேக நபர்களை விசாரித் துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் அரசாங்க அமைச்சகங்கள், உள்துறை, பாதுகாப்பு, நீதி, சுகாதாரம், கல்வி, நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் மற்றும் ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) ஆகியவற்றின் ஊழியர்கள் உள்ளனர் என்று NAZAHA தெரிவித்துள்ளது.

லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் பணமோசடி குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றங்களில் அடங்கும் என்றும், சுமார் 134 குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் NAZAHA தெளிவுப்படுத்தியுள்ளது.

சந்தேகத்திற்கிடமான செயல்பாடு, நிதி அல்லது நிர்வாக ஊழலைக் கண்டால் 980 என்ற இலவச எண் அல்லது மின்னஞ்சல் info@nazaha.gov.sa, மற்றும் தொலைநகல்: 114420057 ஆகியவற்றின் மூலம் தகவல் தெரிவிக்குமாறு NAZAHA பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!