டோக்கியோவில் நடைபெற்ற சவுதி அரேபியா-ஜப்பான் விஷன் 2030 வணிக மன்றத்தில்; சவூதி அரேபியாவும் ஜப்பானும் எரிசக்தி, உற்பத்தி மற்றும் நிதி நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் 30க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டது.
சவுதி அரேபியாவின் எண்ணெய் அல்லாத வருவாய் இரட்டிப்பாகியுள்ளதாகவும், மேலும் 3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை எதிர்பார்க்கிறது என்றும், இது ஜப்பானிய பங்குதாரர்களுக்குப் பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது என முதலீட்டு அமைச்சர் காலித் அல்-பாலிஹ்
குறிப்பிட்டார்.
மன்றத்தில் நடைபெற்ற “டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் ரவுண்ட் டேபிள்” நிகழ்ச்சியில் சவுதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பு அமைச்சர் அப்துல்லா அல்-ஸ்வாஹா உரையாற்றினார். இதில் 300க்கும் மேற்பட்ட சவூதி மற்றும் ஜப்பானிய வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் பங்கேற்றனர்.
வர்த்தக மன்றத்தில் ஜப்பானிய தொழில்துறை அமைச்சர் கென் சைட்டோ, எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான், முதலீட்டு அமைச்சர் காலித் அல்-பாலிஹ், சவுதி அராம்கோ மற்றும் பிற பெரிய சவுதி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், நிர்வாகிகளையும் சந்தித்தார்.





