மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 254 தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் தகராறைத் தீர்த்து உள்ளது.
தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தின் மேல் ஒரு வகுப்பு நடவடிக்கை வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தீர்வு நடவடிக்கை ரியாத்தில் உள்ள சுமுக தீர்வுத் துறையின் களக் குழு ஆய்வு செய்து, இதனை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் சம்பளம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்குதல் ஆகியவை அமைப்பின் கீழ் தீர்வாகக் கொடுக்கப்படுள்ளது.
இதில் பணி ஒப்பந்தங்கள், ஊதியங்கள், உரிமைகள், வேலை காயங்கள் மற்றும் இழப்பீடு, விடுமுறைக் கொடுப்பனவுகள் மற்றும் வேலை தொடர்பான அனைத்தும் அடங்கும்.
இரு தரப்பினருக்கும் இடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும், அவர்களின் உறவை உறுதிப்படுத்தவும், நிறுவனங்களில் தொழிலாளர் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், அனைத்து தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்க அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.