2060 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் காலநிலை லட்சியங்களை அடைய 2021 ஆம் ஆண்டில் சவூதி பசுமை முன்முயற்சி தொடங்கப்பட்டதாகச் சவூதியின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் அறிவித்தார்.
எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் “COP27” இல் SGI மன்றத்தின் முந்தைய அமர்வு மற்றும் துபாயில் நடப்பு “COP28” இன் போது சவூதி அரேபியா தனது புதுப்பிக்கத் தக்க எரிசக்தி லட்சியங்களை அடைய தனது தீவிர ஆர்வத்தையும் முயற்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளது என்று இளவரசர் கூறினார்.
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி திட்டங்களுக்கான வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதன் ஒரு பகுதியாக, 2024 ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் டெண்டர் செய்யத் திட்டமிட்டுள்ளதாக இளவரசர் கூறினார். சவுதி அமைச்சர் 4.6 ஜிகாவாட் மற்றும் 8.4 ஜிகாவாட் திறன் கொண்ட நான்கு எரிவாயு மின் நிலையங்களை உருவாக்குவதையும் உறுதிப்படுத்தினார்.சவூதி அரேபியா 7 ஜிகாவாட் திறன் கொண்ட கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் என்றார்.
NEOM திட்டம் 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை எட்டியுள்ளதால், உலகளவில் பச்சை ஹைட்ரஜனின் முக்கிய ஏற்றுமதியாளராகச் சவூதி அரேபியா மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இளவரசர் அப்துல்அஜிஸ் வலியுறுத்தினார்.
சுத்தமான மற்றும் பசுமையான மின்சாரம் மற்றும் ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்வதற்கான தனது லட்சியத்தை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியாவில் ஜி20 மாநாட்டின் போது இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சவூதி அரேபியா கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
சமீபத்தில் ரியாத்தில் நடந்த சவுதி-ஆப்பிரிக்க உச்சி மாநாட்டில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் நெகிழ்வான உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை மற்றும் தழுவல் சிக்கல்களை மேம்படுத்த 50 பில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகச் சவூதி அரேபியா அறிவித்தது. 2021 முதல், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் சவூதி அரேபியாவின் பசுமை மத்திய கிழக்கு முன்முயற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.





