சவூதி சுற்றுலாத் துறையானது தேசிய பொருளாதாரத்திற்கு சவூதி ரியால் 750 பில்லியன் பங்களிப்பை வழங்குவதோடு 2030 ஆம் ஆண்டுக்குள் 150 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்க விரும்புவதாகச் சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப் தெரிவித்தார்.
உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவடைந்த பின் சுற்றுலா மற்றும் பயணத் துறையில் உலகின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாகச் சவூதி அரேபியா மாறும் என்றும், சுற்றுலாத் துறையில் பெற்றுள்ள வெற்றிகள், திட்டங்கள் தற்போது சரியாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விருந்தோம்பல் வசதிகள் தொடர்பான சுற்றுலாத் துறையில் வரவிருக்கும் திட்டங்களின் தரம், ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகளில் மிக உயர்ந்ததாக இருப்பதாகவும், முக்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நுழைவதற்கு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.





