மார்ச் 10, 2024 முதல் தனியார் துறையில் பல் மருத்துவத் தொழிலின் 35% உள்ளூர்மயமாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கான முடிவைச் சவுதி அரேபியா அறிவித்து, மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD), சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து இந்த முடிவைச் செயல்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.
சவூதி முழுவதிலும் உள்ள ஆண் மற்றும் பெண் குடிமக்களுக்கு அதிக ஊக்கமளிக்கும் ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகங்கள் அறிவித்தன.
தொழிலாளர் சந்தையின் தேவைகள் மற்றும் பல் மருத்துவத் தொழிலின் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மனித வள மேம்பாட்டு நிதி (HADAF) மூலம் ஆதரவு மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களைத் தவிர, அமைப்பில் கிடைக்கும் அனைத்து Saudization ஆதரவு திட்டங்களைப் பயன்படுத்துவதில் முன்னுரிமை அளிப்பதோடு பொருத்தமான தொழிலாளர்களைத் தேடுவது, தேவையான பயிற்சி மற்றும் தகுதி செயல்முறையை ஆதரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
MHRSD அமைச்சகத்தின் இணையதளத்தில் Saudization விவரங்கள், இலக்குத் தொழில்கள் மற்றும் தேவையான சதவீதங்களை விளக்கும் வழிகாட்டியை வெளியிட்டு, மீறுபவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் சட்டரீதியான தண்டனைகளைத் தவிர்ப்பதற்காக, விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நிறுவனங்கள் இணங்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.