2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சவூதி அரேபியாவின் எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகள் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.3 சதவிகிதம் வருடாந்திர அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. மறு ஏற்றுமதியின் மதிப்பு மார்ச் 2023 உடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரரித்து மார்ச் 2024 இல் 6.4 பில்லியன் ரியாலை எட்டியுள்ளது.
புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையத்தின் சர்வதேச வர்த்தக Q1 2024 அறிக்கை மார்ச் 2024 இல் இரசாயன மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறை தயாரிப்பு ஏற்றுமதியில் 19% அதிகரித்து 6.5 பில்லியன் ரியால் எட்டியுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 2024 உடன் ஒப்பிடும்போது மார்ச் 2024 இல், சரக்கு மற்றும் எண்ணெய் அல்லாத ஏற்றுமதி 5% மற்றும் 6% அதிகரித்துள்ளது. கனிம பொருட்கள் ஏற்றுமதி பிப்ரவரி 2024 உடன் ஒப்பிடும்போது 6 சதவிகிதம் அதிகரித்து 77.8 பில்லியன் ரியாலை எட்டியுள்ளது.





