ஜித்தா சுப்பர்டோமில் நடைபெற்ற 3வது வருட ஹஜ் மற்றும் உம்ரா சேவைகள் மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்து கொண்ட ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா 2023 ஆம் ஆண்டில் உம்ரா செய்த பயணிகளின் எண்ணிக்கை 13.55 மில்லியனை எட்டியதாக அறிவித்தார். 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உம்ரா பயணிகளின் எண்ணிக்கையில் ஐந்து மில்லியன், 58 சதவீதம் அதிகரித்துள்ளது.
2019 இல் நாட்டிற்கு வெளியே இருந்து வந்த உம்ரா பயணிகளின் எண்ணிக்கை 8.55 மில்லியனாக இருந்தது, இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 13.55 மில்லியனாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு உம்ரா பயணிகளின் வரலாற்றில் இந்த எண்ணிக்கை மிகப்பெரியது என அமைச்சர் கூறினார்.
80 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் பங்கேற்பை மாநாட்டின் தற்போதைய பதிப்பு காட்டுகிறது. மாநாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளுடனும் ஹஜ் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 35 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது தங்கள் சேவைகளை வழங்கும், என்று அவர் கூறினார்.
5 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைப் புனித தலங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்தச் சவூதி அரேபியா தொடங்கியுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார். பயணிகளுக்குச் சேவை செய்ய இந்த ஆண்டு 120,000 க்கும் மேற்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
பயணிகளின் வருகையை எளிதாக்கும் வகையில் 200 க்கும் மேற்பட்ட நடைமுறைகளை உருவாக்கக் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றியதாக அவர் கூறினார். போக்குவரத்துத் துறையில் பங்குதாரர்கள் 164 இடங்களிலிருந்து 216 இடங்களுக்கு நேரடி விமானங்களை அதிகரிக்கச் செயல்படுவதாக அல்-ரபியா கூறினார்.