இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தலைமையிலான சவூதி அரேபியாவின் அரசாங்கம், ஆள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதிலும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், நாட்டின் அனைத்துத் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்தைப் பாதுகாப்பதிலும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அமைச்சகத்தின் கீழ் உள்ள கண்காணிப்பு குழுக்கள் கூட்டுப் பிரச்சாரத்தில் ஆட் கடத்தலை எதிர்த்து 1500க்கும் மேற்பட்ட ஆய்வுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு இதில் பெறப்பட்ட மொத்த எண்ணிக்கை 539 ஐ எட்டியுள்ளது என ஆய்வில் தெரியவந்தது.
இந்தப் புகார்கள் தொழிலாளர் தகராறுகள், வன்கொடுமைகள், கட்டாய உழைப்பு மற்றும் தொழிலாளர் விதிமுறைகளை மீறுதல் தொடர்பாகவும், மேலும் இதில் 49 நபர்களைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வழக்குகளும் இருந்ததன் காரணமாக வழக்குகளைக் கையாள்வதில் அரசாங்கம் ஆதரவையும் பாதுகாப்பையும் அளித்துள்ளது.
மனித உரிமைகளின் பாதுகாப்பை ஆதரிக்கும் பல சீர்திருத்தங்கள் 2007ல் அங்கீகரிக்கப்பட்டு, குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துவதைத் தடுக்கவும், தண்டிக்கவும், பலேர்மோ புரோட்டோகால் எனப்படும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்கு சவூதி அரேபியா துணைபுரிகிறது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்குவதன் மூலம், மனித கடத்தல் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வி முயற்சிகளை அமைச்சகம் வலுப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஆதரவளிக்கவும் அமைச்சகம் பல பயிலரங்குகளை நடத்தி ஒப்பந்த உறவை மேம்படுத்துவதற்கான முயற்சி, ஊதிய பாதுகாப்பு திட்டம், ஒப்பந்த ஆவணங்கள் திட்டம், மின்னணு இணக்கத்தை செயல்படுத்துதல், தீர்வுச் சேவை மற்றும் Musaned தளம், உட்பட மனித கடத்தலை எதிர்த்துப் பல திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் புகார்களைப் பெறுவதற்கும், அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த விண்ணப்பத்துக்கும் கூடுதலாக, பல மொழிகளில் வழங்கப்படும் கால் சென்டர்கள், பல்வேறு சேனல்களையும் அமைச்சகம் வழங்கியது. சந்தேகத்திற்கிடமான மனித கடத்தல் குற்றங்கள் தொடர்பான தகவல்களை இந்தச் சேனல்களில் தெரிவிப்பதன் மூலம் அதன் தொடர்பாகத் தேவையான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.