2023 ஹஜ்ஜின்போது புனித தலங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த உணவுப் பொருட்களின் எண்ணிக்கை 751,655,000 ஆகும்.
406 மில்லியன் பாட்டில்கள் பால் பொருட்கள் மற்றும் பழச்சாறுகள் கொண்ட பானங்கள், 207 மில்லியனுக்கும் அதிகமான தண்ணீர் பாட்டில்கள். 128 மில்லியனுக்கும் அதிகமான ரொட்டிகள் என 7 மில்லியனுக்கும் அதிகமான சேவைகளை அமைச்சகம் வழஙங்கியுள்ளது.
ஹஜ் சீசன் முழுவதும் ஏராளமாக உணவு பயணிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய விரிவான திட்டத்தை அமைச்சகம் தயாரித்து, புனித தலங்களில் உள்ள விற்பனை நிலையங்களில், பயணிகளுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களை வழங்க 700க்கும் மேற்பட்ட போக்குவரத்து லாரிகளை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
ஹஜ் பருவம் முழுவதும் சந்தைகள், கிடங்குகள் மற்றும் விற்பனை நிலையங்களில் போதுமான அளவு உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைத்திருப்பதை அமைச்சகத்தின் கள கண்காணிப்புக் குழுக்கள், உறுதி செய்துள்ளது.