தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் (MIM) சுமார் சவூதி ரியால் 8.2 பில்லியன் முதலீட்டு மதிப்பில் 332 புதிய தொழில் முதலீட்டு உரிமங்களை வழங்கியுள்ளது.
இதில் 7.9 பில்லியன் முதலீட்டில் 300 தொழிற்சாலைகள் உற்பத்தியைத் தொடங்கியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில் மற்றும் சுரங்கத்தின் மாதாந்திர புல்லி விவரப்படி, மார்ச் 2023 இறுயில் சவூதி அரேபியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, ரியால் 1.4 டிரில்லியன் முதலீட்டில் 10,800ஐ எட்டியுள்ளது.
சவூதி தொழில்துறை 28,000 வேலை வாய்ப்புகளைக் கடந்த மார்ச் மாத இறுதியில் உருவாக்கியுள்ளது, இதில் 54% சவூதி குடிமக்களுக்கானது. மேலும் இத்துறையில் உள்ள சுரங்க உரிமங்களின் எண்ணிக்கை 2,314 ஐ எட்டியுள்ளது.