தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் (எம்ஐஎம்) சவூதி அரேபியாவின் மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் 10,819 ஐ எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
தொழில்துறையின் விரிவான பகுப்பாய்வை இது வழங்கியுள்ளது.2023 ன் முதல் காலாண்டு முடிவில் தொழிற்சாலைகளில் முதலீடு செய்யப்பட்ட மொத்த அளவு ரியால் 1.432 டிரில்லியன்களை எட்டியுள்ளது.இரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழிற்சாலைகள், முதலீட்டு அளவின் அடிப்படையில் முதலிடம் பிடித்துள்ளது.
தேசிய தொழிற்சாலைகள் முதலீட்டு படி வெளிநாட்டு தொழிற்சாலைகள் 8.5%, கூட்டு முதலீட்டு தொழிற்சாலைகள் 8% அதிகம் பெற்றுள்ளது. ரியாத் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் உள்ளது, அல்-ஷர்கியாவில் சுமார் 2,476 தொழிற்சாலைகளும், மக்கா பகுதியில் 2,068 தொழிற்சாலைகளும் உள்ளன.
சவூதியில் மொத்தம் 5,654 சிறிய தொழிற்சாலைகளும், அதைத் தொடர்ந்து 4,341 நடுத்தர தொழிற்சாலைகளும், 824 பெரிய தொழிற்சாலைகள் இருப்பதாக MIM இன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சவூதியின் தொழிற்சாலைகளில் வெளிநாட்டு முதலீடுகள் 8.5% ஆகும்.சவூதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 920 என்பது குறிப்பிடத்தக்கது.