2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கான மதிப்பீட்டைச் சவூதி அரேபியா முந்தைய மதிப்பீடுகளில் 1.1 சதவீதத்திலிருந்து 1.2 சதவீதமாக உயர்த்தியுள்ளதாகப் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) அறிக்கை தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆரம்ப மதிப்பீடுகளில் 5.5 சதவிகிதமாக இருந்த எண்ணெய் அல்லாத நடவடிக்கைகள் 2023 ஆம் ஆண்டில் 6.1 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ளன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது, அரசாங்க நடவடிக்கைகளும் 2.3 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து முதல் முறையாகக் காலாண்டு அடிப்படையில் எண்ணெய் நடவடிக்கைகள் துறை சுருங்கினாலும், முந்தைய மதிப்பீடுகளில் 4.2 சதவீதத்திற்கு பதிலாக 4.3 சதவீதம் பதிவு செய்தது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பருவகாலமாகச் சரிசெய்யப்பட்ட உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 சதவிகிதம் சரிவைக் கண்டதாக அறிக்கையின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அறிக்கைப்படி சர்வதேச நாணய நிதியம் சவுதி அரேபியாவில் எண்ணெய் அல்லாத நடவடிக்கைகளின் வளர்ச்சி வேகம் தொடரும் என்றும், இந்த ஆண்டு சவூதியின் பொருளாதாரம் 1.9 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.