சவூதி அரேபியா 2023 காலநிலை வாரத்தை ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டின் (UNFCC) ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் ரியாத்தில் நடத்தும் என்று எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமைச்சர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்வு அக்டோபர் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.பாரீஸ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலநிலை மாற்ற நோக்கங்களை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, “உலகளாவிய பொறுப்புகள்” என்பதே இந்த. காலநிலை விழிப்புணர்வு வாரத்தின் செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளின் கருப்பொருளாக இருக்கும் என்று அமைச்சகம் கூறியது.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் கூட்டமைப்பின் 28வது மாநாடு (COP28) க்கு முன்னதாக MENA என்ற இந்தக் காலநிலை விழிப்புணர்வு வாரம் 2023 ஐ நடத்துவது, பகுதியின் முயற்சிகள் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான அணுகுமுறையை முன்னிலைப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும் என்று அமைச்சகம் குறிப்பிட்டது.
வாரத்தில் பல்வேறு முக்கியமான சர்வதேச நிகழ்வுகள், கூட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். உலகெங்கிலும் உள்ள அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், ஊடகப் பிரமுகர்கள், ஆற்றல் மற்றும் காலநிலை பிரச்சினைகளில் ஆர்வமுள்ளவர்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகள், வாய்ப்புகளை ஆராய்ந்து மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் அதன் தாக்கங்களைக் குறைப்பதற்கும், கார்பன் டை ஆக்சைடு அகற்றுதல், நடைமுறை மற்றும் பகுத்தறிவு தீர்வுகளைக் கண்டறிவதில் ஒத்துழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.