புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து தயாரிப்புகளில் பேரீட்சை பழம் 2022 இல் 124% மதிப்பீட்டில் மிக உயர்ந்த தன்னிறைவு விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்தது.
GASTAT 2022 ஆம் ஆண்டிற்கான முக்கிய விவசாயப் பொருட்களின் தன்னிறைவு விகிதங்களில் உருளைக்கிழங்கு 80% தன்னிறைவு, தக்காளி 67%, வெங்காயம் 44% மற்றும் சிட்ரஸ் 15% ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் பால் பொருட்கள் 118% விகிதத்தில் மிகவும் தன்னிறைவு பெறறு முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து முட்டைகள் 117%, மற்றும் மீன் 48% பதிவு செய்துள்ளன.
2022 ஆம் ஆண்டில் மொத்த விவசாய இறக்குமதிகள் 29,376,000 டன்களை எட்டி 45.2% இறக்குமதியுடன் தானியங்கள் மிகப்பெரிய பங்கையும், விவசாய ஏற்றுமதி 2021 உடன் ஒப்பிடும்போது 14% வளர்ச்சியடைந்து 2022 இல் மொத்தம் 3,687,000 டன்களை எட்டியுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்தியது.
விவசாயிகள், விவசாயத் திட்டங்கள், மீனவர்கள் மற்றும் தேனீ வளர்ப்பவர்கள் உட்பட அனைத்து வகையான பயனாளிகளுக்கும் வழங்கப்பட்ட கடன்களின் மதிப்பு சவூதி ரியால் 11.5 பில்லியனை எட்டியுள்ளதாக GASTAT இன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.