சவூதி பொது முதலீட்டு நிதி (PIF) நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM) 2022 இன் இறுதியில் 12.8% உயர்ந்து 2.23 டிரில்லியன் ரியால்களாக இருந்தது, 2021 இன் இறுதியில் 1.98 டிரில்லியன் ரியால் ஆக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் சவூதி இறையாண்மை பண நிதியம் இதைத் தெரிவித்துள்ளது.
NEOM, Red Sea, Qiddiya மற்றும் Roshn போன்ற மெகா திட்டங்களின் மதிப்பு சுமார் 245.7% அதிகரித்து 34 பில்லியன் ரியாலிலிருந்து 121 பில்லியன் ரியால்களாகவும், சவூதி நிறுவனங்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ 483 பில்லியன் ரியாலிலிருந்து 49% அதிகரித்து 718 பில்லியன் ரியாலாகவும் உள்ளது. இந்தக் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை அடைய PIF பெரிதும் பங்களித்துள்ளது.
சவூதி விஷன் 2030 திட்டத்தின் முதுகெலும்பாக இறையாண்மை பண நிதி கருதப்படுகிறது. கடந்த ஆண்டு நிதியின் செயல்திறனில் உள்ளூர் முதலீட்டு போர்ட்ஃபோலியோக்கள் ஆதிக்கம் செலுத்தியது.
2022 ஆம் ஆண்டில் மொத்த பங்குதாரர்களின் வருவாயை 8% ஈட்டியதாகவும், 25 நிறுவனங்களை நிறுவியதாகவும் PIF கூறியது.பெண்களை மையமாகக் கொண்ட உடல்நலம் மற்றும் நல்வாழ்வு நிறுவனத்தை இளவரசி ரீமா பின்த் பண்தரைத் தலைவராகக் கொண்டு நிறுவுவதாக இறையாண்மை பண நிதியம் அறிவித்துள்ளது.
விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் முயற்சியில், SRJ Sports Investments Co. சவூதி அரேபியா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் ஒரு புதிய விளையாட்டு முதலீட்டு நிறுவனத்தை PIF நிறுவியுள்ளது. நிறுவனம் குறிப்பிடத் தக்க போட்டிகளை வணிகமயமாக்குவதிலும், நாட்டில் முக்கிய உலகளாவிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதிலும் கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.