இந்தியாவுக்கான சவூதி தூதர் சலே பின் ஈத் அல்-ஹுசைனி, 2022 ஆம் ஆண்டில் சவூதி மற்றும் ஜி 20 நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பரிமாற்றத்தின் அளவு 421 பில்லியன் டாலர்களை எட்டியது என்று தெரிவித்தார்.
ஜி 20 இல் பங்கேற்கும் மிகப்பெரிய உலகளாவிய பொருளாதாரங்களில் சவூதியும் இந்தியாவும் உள்ளன என்றும் ,2023 செப். 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடைபெற்ற ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் இந்தியா சென்ற நிலையில், சவுதி அரேபிய செய்தி நிறுவனத்திடம் பேசிய அல்-ஹுசைனி இதனைத் தெரிவித்தார்.
G20 பொருளாதாரங்களின் அளவு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 85% ஐக் குறிப்பதோடு, உலக மக்கள்தொகையில் 60%,உலக வர்த்தகத்தில் 75% ஆகும்.
சவூதி அரேபியா இந்தியாவின் 4 வது வர்த்தக கூட்டாளியாகும், அதே சமயம் இந்தியா சவூதியின் 2 வது வர்த்தக பங்காளியாகும், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தின் அளவு 2021 இல் 35 பில்லியன் டாலராக இருந்து சமீபத்தில் 50% அதிகரித்து 53 பில்லியன் டாலரை எட்டியது என்றும் அல்-ஹுசைனி குறிப்பிட்டார்.
எண்ணெய், பெட்ரோ கெமிக்கல்கள் மற்றும் உரங்கள் இறக்குமதிக்கு இது ஒரு முக்கிய நம்பகமான ஆதாரமாகக் கருதப்படுகிறது, மேலும் இது எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விலை நிலைதன்மைத் துறையில் உலகளவில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவுடன் இணைந்து ஜி 20 நாடுகளில் இந்தியா மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதங்களை எட்டிய நேரத்தில் 2023 ஆம் ஆண்டில் ஜி 20 ஐ இந்தியா நடத்துவதன் முக்கியத்துவம் இருப்பதாகவும், இந்தியா தற்போது அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதாகவும், உலகின் 5 வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளது என்றும் அல்-ஹுசைனி மேலும் கூறினார்.