சவூதி பொது பொழுதுபோக்கு ஆணையம் (GEA) அதன் செயல்பாடுகள் முடிவதற்குள் 2023 ரியாத் சீசனின் தற்போதைய பதிப்பிற்கான பார்வையாளர்களின் இலக்கு எண்ணிக்கையை அடைவதில் வெற்றி பெற்று அதிகமான பார்வையாளர்களை எட்டியுள்ளதாக GEA இன் இயக்குநர்கள் குழுவின் தலைவர் டர்கி அல்-ஷேக் அறிவித்தார்.
மேலும் அக்டோபரில் தொடங்கிய ரியாத் சீசனின் 4 வது பதிப்பு, 2021 ஆம் ஆண்டில் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட இரண்டாவது பதிப்பில் எட்டப்பட்ட எண்ணிக்கையை முறியடித்துச் சிறந்த சாதனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் நாட்களில் ரியாத் சீசன் கோப்பை சாம்பியன்ஷிப், ரியாத் சீசன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பின் (ஆங்கில பில்லியர்ட்ஸ்) முதல் பதிப்பு “ரியாத் சீசன் பால்,” கலப்பு தற்காப்புக் கலைகளில் UFC சண்டைகள் (5v5), மற்றும் வரலாற்று குத்துச்சண்டை போன்ற பெரிய நிகழ்வுகள் தொடங்கப்படும்.
2019 ஆம் ஆண்டில் ரியாத் சீசனின் முதல் பதிப்பிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 9.6 மில்லியனுக்கும் அதிகமாகவும், 2022 ஆம் ஆண்டில் மூன்றாவது பதிப்பிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 13 மில்லியனுக்கும் அதிகமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.