சவூதி அரேபியாவின் ஹெரிடேஜ் கமிஷன் 202 புதிய தொல்பொருள் தளங்களைச் சேர்த்து 9,119 தொல்லியல் தளங்களாக அறிவித்துள்ளது. இது சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள செழுமையான வரலாறு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை சுட்டிக்காட்டுகிறது.
ஒவ்வொரு தளத்திற்கான ஆவணப்படுத்தல் செயல்முறையானது ஆரம்ப கண்டுபிடிப்பு, நிபுணர்களின் விரிவான ஆய்வு மற்றும் தொல்பொருள் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளின் இறுதி வரைவு ஆகியவற்றை உள்ளடக்கியது.
சவூதியில் புதிதாக ஆவணப்படுத்தப்பட்ட தளங்களில் ரியாத்தில் உள்ள 102 தளங்கள், ஆசிரில் 20 தளங்கள் மற்றும் ஹையில் உள்ள 80 தளங்கள் குறிப்பிடத் தக்க கண்டுபிடிப்புகள் உட்பட பல்வேறு கல் கட்டமைப்புகளை உள்ளடக்கியது.
சவூதி அரேபியாவில் ஆரம்பகால இஸ்லாமிய காலத்துக்கு முந்தைய கல்லறைகள், கல் கருவிகள் உட்பட பல தளங்களில் மான், ஓநாய்கள் மற்றும் புலிகள் எனப் பல்வேறு விலங்கு வடிவங்களைச் சித்தரிக்கும் THAMUDIC கல்வெட்டுகள் மற்றும் பாறைக் கலை ஆகியவற்றை ஆணையம் கண்டுபிடித்து நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமூக ஈடுபாட்டை இந்த முயற்சி ஊக்குவிக்கிறது எனக் கூறியுள்ளது.