2019 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட காலத்தில் மன மற்றும் சமூக ஆரோக்கியம் மற்றும் சக உறவுகள் தொடர்பான பிரச்சனைகளின் விகிதம் சவுதி குழந்தைகளிடையே குறைந்துள்ளது என்று சைல்ட் ஹெல்ப்லைன் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
Okaz/Saudi Gazette உடன் பேசிய ஆதாரங்கள், 2022 ஆம் ஆண்டில், சைல்ட் ஹெல்ப்லைனுக்கு 31,770 அழைப்புகள் வந்ததாகவும், அதில் 12,541 அல்லது 39 சதவிகிதம் தீவிரமான அழைப்புகள் என்றும்,ரியாத் பகுதி அதிக எண்ணிக்கையிலான உள்வரும் அழைப்புகளைப் பதிவுசெய்தது, அதைத் தொடர்ந்து மக்கா பகுதியும் பின்னர் கிழக்கு மாகாணமும் வந்தது என கூறியுள்ளது.
ஹெல்ப்லைன் அனைத்து வகையான குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவ பிரச்சனைகள் தொடர்பான அழைப்புகளை சவூதி முழுவதிலும் இருந்து பெறுகிறது. 92 சதவீத அழைப்புகளில் 29 சதவீதம் முறைகேடு மற்றும் வன்முறை, 17 சதவீதம் குடும்ப உறவுகள்,18 சதவீதம் மன மற்றும் சமூக ஆரோக்கியம், 19 சதவீதம் சட்டம், 9 சதவீதம் பள்ளி மற்றும் 5 சதவீதம் சக உறவுகள் போன்ற பொதுவான வகை பிரச்சனைகளுடன் தொடர்புடையவை என்றும் கூறியுள்ளது.
சவூதி அரேபியாவின் தேசிய குடும்பப் பாதுகாப்புத் திட்டத்தின் (NFSP) ஒரு பிரிவுதான் குழந்தை உதவி மையம் என்பது குறிப்பிடத்தக்கது. முறைகேடு மற்றும் புறக்கணிப்புக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை சேவைகள் மற்றும் ஆதரவை ஹெல்ப்லைன் வழங்குவதோடு, 116 111 இலவச எண் சவூதி முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு எளிதான அணுகல் மற்றும் ரகசிய அவுட்ரீச் சேவையை வழங்குகிறது.
ஹெல்ப்லைன் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உதவி மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குவதன் மூலம் தனது சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.