Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் 201,000 சவூதியர்களுக்கு வேலைவாய்ப்பை அங்கீகரித்துள்ள மனித வள மேம்பாட்டு நிதியம் (HRDF).

201,000 சவூதியர்களுக்கு வேலைவாய்ப்பை அங்கீகரித்துள்ள மனித வள மேம்பாட்டு நிதியம் (HRDF).

169
0

2023 முதல் பாதியில் தனியார் துறையில் குடிமக்களின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் 201,000 ஆண்கள் மற்றும் பெண் குடிமக்களுக்கு மனித வள மேம்பாட்டு நிதியம் (HRDF) வேலைவாய்ப்பை அங்கீகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 150,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதியர்களின் திறன்களை மேம்படுத்தவும், தொழிலாளர் சந்தையில் மக்களின் பங்கேற்பை உயர்த்தவும், தேசியமயமாக்கல் முயற்சிகளுக்குப் பங்களிக்க தனியார் துறையின் முக்கியத்துவத்தை மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அகமது அல்-ராஜி எடுத்துரைத்தார்.

நாட்டின் முக்கிய துறைகளில் இயங்கும் 79,000 நிறுவனங்கள் இத்திட்டங்களால் பயனடைந்துள்ளன, இது கடந்த ஆண்டின் 56,000 நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் 41% அதிகமாகும், திட்டச் செலவுகள் 4.6 பில்லியன் ரியால்களைத் தாண்டியுள்ளது.

HRDF இயக்குனர் தர்கி அல்-ஜவினி, சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப மனித வள அமைப்பை ஒருங்கிணைக்கவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் துறை சார்ந்த முன்னுரிமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் HRDF தனது முயற்சிகளைத் தொடரும் என்று வலியுறுத்தினார்.

சவூதி விஷன் 2030ன் இலக்குகளை அடைய பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், அதிகாரமளித்தல் மற்றும் வழிகாட்டுதலுக்கு ஆதரிக்கும் திட்டங்களை மேம்படுத்தவதிலும் HRDF பணியாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!