கடந்த 20 ஆண்டுகளாகத் தனியார் துறை வேலைகளில் தொடர்ந்து பணியாற்றி வரும் சவூதி குடிமக்களின் எண்ணிக்கை 123000 ஐ எட்டியுள்ளதாகத் தேசிய தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பு (NLO) தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பானது தனியார் துறை வேலைகளில் சவூதி குடிமக்களின் நிலைத்தன்மையின் முன்னேற்றத்தைக் குறிப்பதாக NLO வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க ஆதரவு மற்றும் தேசியமயமாக்கல் திட்டங்களால் இயக்கப்படும் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் தனியார் துறை வழங்கும் நிதி ஊக்கங்கள் மற்றும் வெகுமதிகள் காரணமாக, தொழிலாளர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் வெற்றி என அறிக்கை விவரித்தது.