2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில் சமூகக் காப்பீட்டுச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் உள்ள கட்டுமான மற்றும் கட்டிடத் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 2.54 மில்லியனை எட்டியுள்ளது.
அல்-எக்திஷாதியாவின் அறிக்கையின் படி, சமூகக் காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகபட்சமாக 85.5% தொழிலாளர்களும், சவூதி குடி மக்களை பொறுத்தவரை இந்தத் துறையில் சுமார் 368,000 தொழிலாளர்களுடன்14.5% உள்ளனர்.
மேலும் இத்துறையில் ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.39 மில்லியனையும், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 154.2ஐயும் எட்டியுள்ளது.இந்த பெண் தொழிலாளர்களில் அதிக சதவீத சவூதி அரேபிய பெண்கள் ஆவர்.
2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவில் சவூதி தலைநகர் ரியாத், 1.2 மில்லியன் தொழிலாளர்களுடன், 47.3 சதவிகித்தத்துடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து 673.2 ஆயிரம் தொழிலாளர்களுடன் அல்-ஷர்கியாவும், அடுத்து 447.3 ஆயிரம் தொழிலாளர்களுடன் மக்கா நகரங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.