சவூதி வேலைவாய்ப்பு சந்தையில் கடந்த 15 மாதங்களில் இரண்டு மில்லியனுக்கு மேலான சவூதி மற்றும் வெளிநாட்டு பெண்கள் சேர்ந்துள்ளனர்.
Okaz புள்ளி விவரப்படி 2021 கடைசி காலாண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு இறுதி வரையில் தொழிலாளர் சந்தையில் பணிபுரிந்த 428,000 சவூதியர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. மொத்தம் 2,55,000 சவூதி பெண்களும்,1,73,000 ஆண்களும்
தொழிலாளர் சந்தையில் இணைந்துள்ளனர்.
தற்போது இந்த எண்ணிக்கை 2.05 மில்லியனை எட்டியுள்ளது. சமூக காப்பீட்டுக்கான பொது அமைப்பு (GOSI), மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய தகவல் மையம் ஆகியவற்றின் அடிப்படையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை 3.6 மில்லியனை 2022 ஆம் ஆண்டு இறுதியில் எட்டியிருந்தது.இதில் 9,72,000 பெண்களும், 2.63 மில்லியன் ஆண்களும் அடங்குவர்.