NEOM giga city தளத்தில் 24 மணி நேரமும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதில் சுமார் 140,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக NEOMன் தலைமை நிர்வாக அதிகாரி நத்மி அல்-நஸ்ர் கூறினார்.
ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லா நிதி மாவட்டத்தில் நடைபெற்ற கிரேட் ஃபியூச்சர்ஸ் முன்முயற்சி மாநாட்டில் அல்-நஸ்ர் உரையாற்றும் போது 2025 ஆம் ஆண்டளவில் திட்டப் பணியாளர்களின் எண்ணிக்கை 200,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
கிடியா, டைரியா, செங்கடல் மற்றும் NEOM திட்டங்களின் தலைவர்கள் அமர்வில் உரையாற்றினர். உள்ளூர் மற்றும் சர்வதேச கூட்டாளர்களுக்கு NEOM அற்புதமான வணிக வாய்ப்புகளை வழங்குகிறது என்று அல்-நஸ்ர் கூறினார்.





